இனியாவது காதில் பூ சுற்றுவதை நிறுத்தி கொள்ளுங்கள்: உதயநிதி டுவீட்

வெள்ளி, 10 ஜூலை 2020 (17:23 IST)
இனியாவது காதில் பூ சுற்றுவதை நிறுத்தி கொள்ளுங்கள்
நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில வாரங்களாகவே தனது டுவிட்டர் பக்கத்தில் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவது குறித்த செய்திகளுக்கு அவர் கிண்டலுடன் கூடிய டுவிட்டுக்களை பதிவு செய்து வருகிறார் 
 
அந்த வகையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நிவாரணம் வழங்கியதாலே அண்ணன் ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்’ என அவரின் தியாகத்தை அடிமை ‘அசிங்க’ கூஜாக்கள் கொச்சைப்படுத்தினர். ஆனால் வீட்டு வாசலைக்கூட தாண்டாத அமைச்சர்கள், அதிமுக MLAக்களை கொரோனா தொற்றிவருகிறது. அந்த வரிசையில் இன்று ஓர் அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது' என்று கூறியுள்ளார்.
 
மேலும் இன்னொரு டுவீட்டில் உதயநிதி கூறியபோது, ‘இவர்கள் அனைவரும் உடல்நலன் தேறி வரவேண்டும் என வாழ்த்தும் அதேசமயம், ‘எல்லோருக்கும் வந்தால்தான் சமூக பரவல்’ என வாய்க்கு வந்ததெல்லாம் அறிவியல் என அவிழ்த்துவிடும் தமிழக முதல்வர் அவர்கள் இனியாவது காதில் பூ சுற்றுவதை நிறுத்திக்கொண்டு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம்’ என்று தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்