நிபாவிடம் எச்சரிக்கையாக இருப்பது எப்படி? – தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Webdunia
ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (14:13 IST)
கேரளாவில் நிபா வைரஸால் சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில் தமிழக சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில ஆண்டுகள் முன்னதாக பரவி பல உயிர்களை பலி கொண்ட நிபா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோட்டில் 12 வயது சிறுவன் நிபா வைரஸால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நிபா வைரஸ் அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நிபா வைரஸ் வௌவால்கள், பன்றிகளாலும், சுகாதாரமற்ற உணவுகளாலும் மனிதர்களிடையே பரவும்.

நிபா வைரஸுக்கு சிகிச்சை முறைகளோ, தடுப்பூசியோ இதுவரை இல்லை.

காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, தொண்டை புண் உள்ளிட்டவை நிபா வைரஸ் அறிகுறிகளாகும்.

பழந்தின்னி வௌவாலால் நிபா வைரஸ் பரவும் என்பதால் பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்