ஃப்ளைட்ட என்னய்யா சுரங்கத்துக்குள்ள விட்டுட்ட..!? – வைரலாகும் ஷாக்கிங் சாகச வீடியோ!

Webdunia
ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (13:08 IST)
துருக்கியில் விமானத்தை சுரங்கபாதைக்குள் செலுத்திய சாகச வீடியோ உலக அளவில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் விமானிகள் பலர் விமானத்தை வைத்து பல்வேறு சாகசங்களை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் விமான சாகசங்கள் வான்வெளியிலும், கடல் பரப்பின் மேலும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் இத்தாலிய விமானி ஒருவர் விமானத்தை சுரங்கத்திற்கு நுழைத்து பத்திரமாக வெளியேறிய வீடியோ வைரலாகி வருகிறது. இத்தாலியை சேர்ந்த விமானி டேரியோ கோஸ்டா துருக்கியின் இஸ்தான்புல் பகுதியில் உள்ள இரண்டு சுரங்க பாதைக்குள் இவ்வாறாக விமானத்துடன் புகுந்து வெளியேறியுள்ளார். இவ்வாறு விமானத்தை சுரங்கபாதையில் நுழைத்த முதல் விமானி என இவர் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்