வன்னியர்களுக்கு மட்டுமல்ல.. 7 பிரிவினருக்கான ஒதுக்கீடு அது! – தமிழக அரசு மேல்முறையீடு!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (10:53 IST)
வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான உத்தரவின் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது என கூறி இந்த இட ஒதுக்கீட்டை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு என்பது வன்னியர்களுக்கு மட்டுமல்ல, அவர்களோடே 7 பிரிவினருக்குமான இட ஒதுக்கீடு ஆகும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்