சென்னையை அடுத்து மழை வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கன்னியாகுமரி இருந்தது. அங்கு பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இது சம்மந்தமாக இணையத்தில் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகின. இதையடுத்து அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களையும், சீரமைப்பு பணிகளையும் பார்வையிட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.