அரசு பசுமை பண்ணைகளில் குறைந்த விலைக்கு தக்காளி! – படையெடுக்கும் மக்கள்!

புதன், 24 நவம்பர் 2021 (08:56 IST)
தமிழகத்தில் தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் அரசு பசுமை பண்ணைகள் வழியாக குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக தமிழகத்திற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை வேகமாக உயர்ந்து கிலோ 150 ரூபாய்க்கு மேலாக விற்பனையாகி வருகிறது. இதனால் மக்கள் தக்காளி வாங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு பசுமை பண்ணைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பசுமை பண்ணைகளில் கிலோ ரூ.79 முதல் ரூ.100க்குள் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நடமாடும் பசுமை பண்ணைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளிகளை மக்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்