தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் சாதியரீதியான பாகுபாட்டுடன் கூடிய சுடுகாடு, இடுகாடு முறை இருந்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் முன்னதாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சாதிய பாகுபாடு கொண்ட முறையில் சுடுகாடுகள் இல்லாத கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.