இவ்வளவுதான் வசூலிக்க வேண்டும்; இரண்டு தவணையாக…! – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (15:15 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கல்வி கட்டணம் வசூலிக்க புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்ரறை ஆண்டு காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகள் மொத்த கல்வி கட்டணத்தில் 75% மட்டுமே மாணவர்களிடம் பெற வேண்டும் என்றும், அதை இரண்டு தவணையாக செலுத்த பெற்றோருக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்