அமெரிக்காவில், ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படையாக உலகிற்கு தெரிவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு முடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம் மீது, அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுசிர் பாலாஜி என்ற 26 வயது இளைஞர் குற்றச்சாட்டு முன்வைத்தார். ஓபன் ஏஐ முறைகேட்டை முதல் முறையாக உலகிற்கு அவர் வெளிப்படுத்திய நிலையில், திடீரென தனது இல்லத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து விசாரணை செய்த போலீசார், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். ஆனால், இந்த வழக்கை விரிவாக விசாரணை செய்ய வேண்டும் என அவரது பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, காவல்துறையினர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் முழுமையான விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் முடிவில், சுசிர் பாலாஜியின் மரணம் தற்கொலை தான் என முடிவு செய்யப்பட்டது. எனவே, இந்த வழக்கை முறையாக முடித்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஆய்வு குழுவின் அறிக்கையில், சுசிர் பாலாஜி தனது நெற்றியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரை யாரும் கொலை செய்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.