தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஆய்வகம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழகம்!

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (09:34 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுகான் பகுதியிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் சீனாவில் மட்டும் 213 பேர் உயிரிழந்துள்ளனர். உலகில் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில் இந்தியாவிலும் பல இடங்களில் சிலர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து வந்த கேரளாவை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ”சீனாவிலிருந்து தமிழகம் வந்தவர்களுக்கு அவர்களது வீட்டிலேயே மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனினும் தமிழக அரசு கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. புனேவுக்கு பிறகு தமிழகத்தில் வைரஸ் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்