தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது? – தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (17:23 IST)
தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆட்சி காலம் முடியும் நிலையில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில மற்றும் தேசிய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. தமிழகத்தில் ஆட்சிக்காலம் மே 24ல் முடிவடைகிறது.

அதன்படி இன்று இறுதி செய்யப்பட்ட தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6–ல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலின் முடிவுகள் மே மாதம் வெளியாகும்.

தேர்தலுக்கான மனுக்கள் மார்ச் 10 முதல் பெறப்படும். மனு அளிக்க கடைசி நாள் மார்ச் 19. மனுமீதான பரிசீலனை மார்ச் 20ல் நடைபெறும். மனுக்களை மார்ச் 22க்குள் திரும்பபெறலாம்.

மேலும் கொரோனா காலம் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும், பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த உள்ளதாகவும், தற்போது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்