நடிகர் விஷால் நடிப்பில் அவரது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்துள்ள படம் சக்ரா. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படம் ரிலிஸாவதற்கு முன்னதாக பல தடைகளை சந்தித்து கடைசி நேரத்தில் எல்லாவற்றையும் சமாளித்து விஷால் படத்தை ரிலீஸ் செய்தார். அதனால் இந்த படம் ரிலீஸானதே விஷாலுக்கு மிகப்பெரிய சக்ஸஸ் என்று சொல்லப்பட்டது. ஆனால் ரிலீஸான படம் திரையரங்குகளில் வசூலில் சுணங்கியது. இதனால் இரண்டாம் நாளில் நடக்க இருந்த சக்ரா சக்ஸஸ் பார்ட்டி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் படத்தின் தொலைக்காட்சி உரிமையை படத்தின் ரிலீஸுக்கு முன்னர் சன் தொலைக்காட்சி 17 கோடி ரூபாய்க்கு கேட்டுள்ளது. ஆனால் அதை விஷால் வேண்டாம் என சொல்லியுள்ளார். இந்நிலையில் படம் ரிலீஸாகி தோல்வி அடைந்துள்ளதால் இப்போது படத்தை வாங்கக் கூட யாரும் முன்வரவில்லையாம். இதனால் விஷால் வருத்தத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.