திமுக-வின் எதிர்கட்சி பாஜகதான்: தமிழிசை ஆதங்கம்!!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (14:27 IST)
திமுகவினர் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருவதால் திமுகவுக்கு சவாலாக இருப்பது பாஜகதான் என தமிழிசை  தெரிவித்துள்ளார். 


 
 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், திமுகவிற்கு சவாலாக இருப்பது எங்கள் கட்சிதான் என தெரிவித்துள்ளார். மேலும், அவர் மக்கள் பாஜகவை விரும்ப ஆரம்பித்துவிட்டனர் என கூறினார்.
 
திமுக தனது எதிர்க்கட்சியாக பாஜகவைதான் பார்க்கிறது. இதனாலேயே திமுக உறுபினர்கள் அதிமுகவை விட்டுவிட்டு எப்போதும் பாஜகவையே விமர்சித்து வருகின்றனர்.
 
நாங்கள் அவர்களுக்கு சவலாக இருப்பதால்தான் துரைமுருகனும், ஸ்டாலினும் பாஜகவை பற்றியே பேசி வருகின்றனர். தமிழகத்தில் ஆட்சியை கலைப்பதற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை.
 
ஸ்டாலின் வேண்டுமானால் ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என விரும்பலாம், ஆனால் அவரது விருப்பம் நிறைவேறாது என தெரிவித்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்