சனாதனத்தை டெங்குவை போல் ஒழிப்போம் என கூறியவர்களால் டெங்குவையே ஒழிக்க முடியவில்லை: தமிழிசை

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (17:34 IST)
சனாதனத்தை டெங்குவை போல் ஒழிப்போம் என்று கூறியவர்களால் டெங்குவையே ஒழிக்க முடியவில்லை என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  டெங்குவை ஒழிப்பதை போல் சனாதனத்தையும் ஒழிப்போம் என்று கூறினார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன என்பதும் ஒரு சில மாநிலங்களில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சனாதனத்தை டெங்குவை போல் ஒழிப்போம் என்று கூறியவர்களால் டெங்குவை ஒழிக்க முடியவில்லை என்று தெரிவித்தார். 
 
மேலும், தீபாவளி விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாதவர்கள் எதற்கு கோயில்களை வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்