புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அதை மாத இறுதி வரை நீட்டிப்பதாக உத்தரவு வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் புதுச்சேரி யூனியன் மாநிலத்திலும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
ஊரடங்கால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இன்றுடன் புதுச்சேரியில் ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க மே 31 வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளார்.