சூரியன் மறையும், தாமரை மலரும்: தமிழிசை சபதம்!

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (16:20 IST)
தண்ணீர் இல்லாத தமிழகத்தில் புல்லே முளைக்காது இதில் தாமரை எங்கே மலரும் என திருச்சி கண்டனக்கூட்டத்தில் ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு படதிலடி கொடுக்கும் விதமாக தமிழிசை டிவிட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். 
 
இன்று திருச்சியில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின்,  திராவிட கழக தலைவர் கி.வீரமணி, திருநாவுக்கரசர், மதிமுக பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 
 
இந்த கூட்டத்தில் ஸ்டாலின், மோடி அரசும், எடப்பாடி அரசும் சேர்ந்து தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட வளராத நிலையில், தாமரை எப்படி மலரும் என பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். 
தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழிசை டிவிட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், இனி மழைக்காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும். குளம் நிறையும். தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம் இது. 
 
ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலர செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்