புல்லே முளைக்காதாம், இதுல தாமரை எங்கிருந்து மலரும்: தமிழிசையை வம்பிழுத்த ஸ்டாலின்

செவ்வாய், 4 டிசம்பர் 2018 (15:09 IST)
தண்ணீர் இல்லாத தமிழகத்தில் புல்லே முளைக்காது இதில் தாமரை எங்கே மலரும் என திருச்சி கண்டனக்கூட்டத்தில் ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது.
 
மேகதாதுவில் அணை கட்டுவது சம்மந்தமாக அனுப்பிய வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் அண்ணா அறிவாளயத்தில் திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
 
இந்நிலையில் இன்று திருச்சியில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின்,  திராவிட கழக  தலைவர் கி.வீரமணி, திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்உள்ளிட்டோர் பங்குபெற்றுள்ளனர்.
இதற்கிடையே மக்களிடையே பேசிய ஸ்டாலின் மோடி அரசும் எடப்பாடி அரசும் சேர்ந்து தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். தேர்தலுக்காகவோ, அரசியலுக்காகவோ மேகதாது விஷயத்திற்கு போராடவில்லை. தமிழக நலனிற்காக போராடுகிறோம். தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட வளராத நிலையில், தாமரை எப்படி மலரும் என பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்