இதில் என்ன வியப்பு, எல்லாம் தெரிஞ்சதுதான்: தீர்ப்பு குறித்து தமிழிசை கமெண்ட்!

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (12:52 IST)
தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று வெளியான தீர்ப்பில் எந்த வியப்பும் இல்லை எல்லாம் எதிர்ப்பார்த்த தீர்ப்புதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். 
 
கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு எதிராக ஆளுநரிடம் 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். அதனால் அதிமுக கொறடா உத்தரவில் சபாநாயகர் அந்த 18 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்தார். 
 
இன்று வழங்கிய தீர்ப்பில் சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை தவறில்லை எனக் கூறி 18 எம்.எல்.ஏக்களின் மனுவையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த 18 பேரின் எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை இழந்துள்ளனர். 
 
இந்த தீர்ப்பு குறித்து தமிழிசை பின்வருமாரு பேசியுள்ளார், தீர்ப்பில் எனக்கொன்றும் வியப்பில்லை. இது எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பை போலத்தான் தெரிகிறது. சபாநாயகரின் அதிகாரம் இதில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், எம்எல்ஏக்கள் 18 பேரை வைத்து கொண்டு கூவத்தூர், குற்றாலம் எனப்போவது, ஆட்சியில் ஸ்லீப்பர் செல் இருக்கிறார்கள் என்று சொல்வது என இத்தனை நாட்களாக ஆட்சியை நிலைகுலைய செய்துள்ளனர் எனவும் விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்