ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை: அதிர்ச்சி தகவல்..!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (11:15 IST)
ஆன்லைன் செயலியில் கடன் வாங்கியவர்கள் மிரட்டப்படுவதை அடுத்து பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மேலும் ஒரு தமிழ்நாட்டை இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 
 
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன பெல்லாளம் என்ற பகுதியைச் சேர்ந்த 22 வயது வசந்த் என்பவர் ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி இருந்தார். ஒரு லட்சம் பணத்தை திருப்பி கட்ட முடியவில்லை என்று அவர் மிரட்டப்பட்டதால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் இது ஒரு விசாரணை செய்து வருகின்றனர். ஆன்லைன் செயலியில் கடன் தருபவர்கள் போன் மூலம் மிரட்டியதாகவும் மார்பிங் மூலம் ஆபாச புகைப்படங்களை அவர்களது காண்டாக்ட்டில் உள்ளவர்களுக்கு அனுப்பி தொல்லை கொடுப்பதாகவும் பல புகார்கள் வந்துள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஆன்லைன் செயலியில் கடன் வாங்கியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்