ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா அமலுக்கு வந்த பின்னரும் ஒருவர் தற்கொலை: அதிர்ச்சி தகவல்..!

சனி, 15 ஏப்ரல் 2023 (14:57 IST)
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சமீபத்தில் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அரசிதமிழில் அந்த சட்டம் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தால் இன்னொரு நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கோவை காந்திபுரத்தில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் சுமார் 90 லட்சம் வரை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சியை சேர்ந்த சபாநாயகம் என்ற 32 வயது இளைஞர் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அவர் தான் தங்கி இருந்த விடுதியில் விஷம் அறிந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் இது குறித்து தகவல் அறிந்த காவல் துறைய உடனடியாக அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. 
 
ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா அமலுக்கு வந்த பின்னரும் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்