இன்னும் 2 நாட்களுக்கு மழை இருக்கு... வெதர் அப்டேட்!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (10:11 IST)
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. 
 
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதன் காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பிற பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு காரணமாக நேற்று சென்னையில் பெரும்பாலான இடங்களில் இரவில் மழை கொட்டியது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேபோல அடுத்த 48 மணி நேரத்தில் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, ராமாநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்