தீபாவளி பட்டாசு வெடித்ததில் ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி!

ஞாயிறு, 15 நவம்பர் 2020 (10:06 IST)
தீபாவளி பட்டாசு வெடித்ததில் ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி!
நேற்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் பொது மக்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக பண்டிகையை கொண்டாடினர் என்பதும் தெரிந்ததே 
 
இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தும் பொதுமக்கள் தடையை மீறி காலை முதல் இரவு வரை பட்டாசுகள் வெடித்தனர். தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது
 
ஆனால் நேற்று அதிகாலை 5 மணியிலிருந்து இரவு 11 மணிவரை தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபத்துகள் குறித்த தகவல்கள் ஆங்காங்கே வந்து கொண்டிருக்கும்போது கள்ளக்குறிச்சி அருகே ஒன்றரை வயது குழந்தை ஒன்று பட்டாசு வெடித்ததில் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கள்ளக்குறிச்சியை கொமரபாளையம் என்ற கிராமத்தில் நேற்று சிறுவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் வெடித்த பட்டாசுகள் அருகில் இருந்த பட்டாசு கடைமீது  விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 18 மாத குழந்தை உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்