தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (11:45 IST)
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிய அறிவிப்பு ஒன்றின் படி தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தகவல். 

 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வந்தாலும் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிய அறிவிப்பு ஒன்றின் படி தமிழகத்தின் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்