மழையால் இடிந்து விழுந்த ஸ்மார்ட் சிட்டி சுவர்! – கோவையில் பரபரப்பு!

வியாழன், 15 ஏப்ரல் 2021 (13:43 IST)
கோவையில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பொதுவளாக சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளின் கீழ் கட்டப்பட்ட சுற்றுசுவர் நேற்று பெய்த மழையில் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் சுவர் இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்