அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

Siva
புதன், 25 டிசம்பர் 2024 (18:50 IST)
அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான வின்சன் என்ற சிகரத்தில் ஏறி, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த முத்தமிழ் செல்வி என்ற இளம் பெண் சாதனை செய்துள்ளார். இதனால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அண்டார்டிகா கண்டத்தில் 16 ஆயிரம் அடி உயரமுள்ள மவுண்ட் வின்சன் என்ற சிகரத்தில் ஏறி முத்தமிழ் செல்வி சாதனை படைத்துள்ளார். உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த உயரமான சிகரத்தில் அவர் ஏறியதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், முத்தமிழ் செல்விக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு முத்தமிழ் செல்வி பெருமை சேர்த்து உள்ளதாகவும், மேலும் இதுபோல் சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்