ஸ்விக்கி, ஜொமைட்டோ மூலம் தமிழ்நாடு ஓட்டல் உணவுகள்: அமைச்சர் தகவல்

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (22:37 IST)
உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களை ஸ்விக்கி, ஜொமைட்டோ மூலம் தமிழ்நாடு ஓட்டல் உணவுகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
தமிழக சுற்றுலா துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டல்களில் உணவுகளை ஸ்விக்கி, ஜொமைட்டோ மூலம் ஆன்லைன் மூலம் ஆர்டர் எடுத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் சுற்றுலாத்துறையில் தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றையும் ஆன்லைன் மூலம் இணைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார் தமிழகத்தில் உள்ள 300 சுற்றுலா தலங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என்றும் இணையதள வசதிகள் உள்பட பல முக்கிய வசதிகள் செய்து கொடுக்க திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்