ரூ.100-க்கு இனி தங்கம் வாங்கலாம்... எப்படி தெரியுமா?
புதன், 29 செப்டம்பர் 2021 (10:21 IST)
இனி வாடிக்கையாளர்கள் நகைக்கடை இணையதளத்தின் மூலம் ரூ.100-க்கு பொதுமக்கள் தங்கத்தை வாங்கலாம்.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.4,350.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.24 குறைந்து ரூ.34,800 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவில் நகை வியாபாரிகள் குறைந்தபட்சமாக ரூ.100 தங்கம் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். இனி வாடிக்கையாளர்கள் நகைக்கடை இணையதளத்தின் மூலம் ரூ.100-க்கு பொதுமக்கள் தங்கத்தை வாங்கலாம்.
கொரோனா பொதுமுடக்க காலத்தின் போது ஆன்லைனில் தங்கம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் ஒரு கிராம் அளவுக்கு பணம் கட்டியவுடன் தங்கம் டெலிவரி செய்யப்படும் என கூறப்படுகிறது.