இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை தொடரும்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (14:36 IST)
தமிழகத்தில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. இது இன்றும் நாளையும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 
 
தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்