காலை முதலே கனமழை; பள்ளிகளுக்கு விடுமுறை!

வியாழன், 7 ஜூலை 2022 (08:31 IST)
நீலகிரி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்