தமிழகத்தில், புதிதாக் தொற்று கண்டறியப்பட்டுள்ள 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரிவித்துள்ளார்.டெல்லி மாநாட்டில் பங்கேற்றவரக்ள் 1475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 571இல் இருந்து 621ஆக உயர்வு என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காமெடி நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், கொரோனாவைப் பற்றி பயப்படாமல் தன் உயிரைச் துச்சமாக நினைத்து மக்களுக்கு சேவையாற்றி வரும் தூய்மை பணியாளருக்கு ஒரு பெண், சந்தனம் குங்குமம்ம் பூக்களால் மரியாதை செய்து, அவரது காலைக் கழுவிவிட்டு, மாலை அணிவித்து கையெடுத்துக் கும்பிட்டு அவரது நெற்றியில் பொட்டு வைத்து, தலையில் பூ தூவினார். பின்ன் அவரது கையில் ஒரு பொருளைக் கொடுப்பது போன்ற அந்த வீடியோவில் உள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
How to praise this? How to name this? Womanhood of India! Motherhood of india? Pure humility!!