இந்த நிலையில் சென்னையில் மட்டும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் ஏற்கனவே 95 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டதை அடுத்து மொத்தம் 110 பேர் சென்னையில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து சென்னை மாவட்டம் தமிழகத்திலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதல் இடத்தில் உள்ளது. சென்னையை அடுத்து கோவையில் 59 பேருக்கும், திண்டுக்கல்லில் 45 பேருக்கும், நெல்லையில் 38 பேருக்கும், ஈரோட்டில் 32 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.