சுவாதி கொலை எதிரொலி: கூலிப்படையை ஒடுக்க நாளை ஆர்ப்பாட்டம்

Webdunia
திங்கள், 27 ஜூன் 2016 (09:54 IST)
கூலிப்படையை ஒடுக்க வலியுறுத்தி பாஜக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.


 

 
சென்னை தியாகராயநகரில் தேமுதிக நிர்வாகிகள் பாஜக-வில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்து வக்கீல்கள் என பலரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது மிகவும் வேதனை அளிக்கிறது.
 
கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து கொலை செய்வது சாதாரணமாகிவிட்டது. இதனால் கூலிப்படையின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், பெண்களுக்கு பாதுக்காப்பு வழங்க வேண்டும், கூலிப்படையினரை ஒடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நாளை காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளது, என்றார்.    
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்