தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள தென் காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை அதிக அளவு செய்து வருகிறது. எனவே, தென் காசியில் உள்ள குற்றால அருவியில் நீர் வரத்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
ஏற்கனவே சமீபத்தில் பெய்த கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் காட்டாறு போல வெள்ளம் ஏற்பட்டது. எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அடிக்கடி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம், அருவிகளில் நீர்வரத்து குறையும் போது சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. அப்படித்தான், கடந்த 27ம் தேதி பயணிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு கனமழை பெய்தது.
எனவே, ஐந்தருவி, மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் என எல்லா அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே, அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்திருக்கிறார்கள். இதன் காரணமாக, தீபாவளியை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக குற்றாலம் அருவில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாந்து போனார்கள்.
ஆனாலும், மழை நின்று நீர்வரத்து குறைந்தால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.