கேமராவில் சிக்கிய சுவாதியை கொலை செய்த கொலையாளி: புதிய வீடியோ

Webdunia
திங்கள், 27 ஜூன் 2016 (09:20 IST)
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி மர்ம நபர் ஒருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் கொலை செய்த குற்றவாளியை பிடிக்க காவல் துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.


 
 
இந்த கொலை செய்த குற்றவாளி யார் என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லை என்பதால் இந்த கொலை குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
 
இந்நிலையில் ரயில் நிலையத்தின் வெளியே உள்ள வீடுகளில், கடைகளில் உள்ள சிசிடிவி கேமரா விடியோக்களை ஆய்வு செய்த காவல் துறை சந்தேகிக்கப்படும் குற்றவாளி என ஒருவரின் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டது.
 
இதனையடுத்து மேலும் ஒரு வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அந்த சந்தேகிக்கப்படும் குற்றவாளி தான் இந்த கொலையை செய்தான் என்பதை உறுதி செய்யக்கூடிய வகையில் மேலும் ஓர் வீடியோவை காவல் துறை வெளியிட்டுள்ளது.

 

நன்றி: NDTV
 
அதில் சிசிடிவி வீடியோவில் சுவாதியை கொலை செய்ய அந்த நபர் ரயில் நிலையம் நோக்கி செல்வதும் கொலை செய்த பின்னர் அந்த நபர் நடைமேடையில் ஓடுவதும் பதிவாகியுள்ளது. குற்றவாளியை இன்னும் நான்கு நாட்களில் பிடித்துவிடுவோம் என காவல் துறை தெரிவித்துள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்