நித்தி டிக்கெட் கொடுத்து அழைத்தால் கைலாசாவுக்கு குடும்பத்துடன் சென்று வருவேன் என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள இந்து ஆன்மீக பக்தர்களால் ஆன்மீக குருவாக ஏற்கப்பட்டவர். இவர் பெங்களூர், குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் மடங்கள் வைத்துள்ளார். மேலும் பாடசாலைகள் பலவும் வைத்துள்ளார்.
நித்யானந்தா மீது சமீப காலமாக பாலியல் வன்முறை, சிறுமிகளை வசியம் செய்து வைத்திருப்பது போன்ற புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியதாக கூறப்பட்டது.
தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இதற்கென்று தனி வெப்சைட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகள் அனைத்தையும் மறுத்துள்ளது ஈடுவடார் அரசு.
இந்நிலையில், எஸ்.வி.சேகர் கைலாசா என்னும் கப்சாவை நம்பி அவருக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நித்தி டிக்கெட் கொடுத்து அழைத்தால் கைலாசாவுக்கு குடும்பத்துடன் சென்று வருவேன். ஆகில இந்திய சன்னியாசிகள் சங்கதலைவராக நித்தியானந்தா இருப்பதால் அவரை கைது செய்ய வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளர்.