அரை மணி நேரத்தில் கூறாவிட்டால்..? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (12:50 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தமிழ்நாடு டிஜிபி, உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டிய நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய பண மோசடி வழக்கு விசாரணையை முடிக்க தமிழ்நாடு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஆறு மாதம் அவகாசம் கேட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
 
இந்த விசாரணையின் போது  தமிழ்நாடு டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகி எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என்பதை கேட்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. 
 
இந்த வழக்கின் விசாரணையின் போது நீங்கள் நிலைத்தால் 24 மணி நேரத்தில் வேலையை முடிப்பீர்கள், 24 வருடங்கள் கூட வேலையை இழுத்து அடிப்பீர்கள். ஒரு அரசு எவ்வாறு செயல்படும் என்பது எங்களுக்கு தெரியும். 
 
செந்தில் பாலாஜி வழக்கில் எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை 30 நிமிடத்தில் கூற வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர் 
 
அரை மணி நேரத்தில் கூறாவிட்டால் தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக சம்மன் விடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்