மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (09:32 IST)
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், மக்களுக்காகப் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தி, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த  நிலையில், உலக சாதனை முயற்சியாக கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் போட்டியை தமிழக அரசு நடத்தியுள்ளது.

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில்,  விளையாட்டு, வீரர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்.

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி 42கிமீ, 10 கிமீ, 5கிமீ என  4 பிரிவுகளில்  நடைபெற்ற நிலையில்,  வெற்றி பெற்றவர்களுக்கு 9 பிரிவுகளில் மொத்தம் ரூ.10.70 லட்சம் பரிசாக வழங்கப்படவுள்ள நிலையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது பரிசு வழங்கி வருகிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்