27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. உள்துறை செயலாளர் பி.அமுதா உத்தரவு..!

சனி, 5 ஆகஸ்ட் 2023 (09:21 IST)
27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. உள்துறை செயலாளர் பி.அமுதா உத்தரவு..!
 
 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பி அமுதா அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  
 
தமிழக அரசுஅவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழக உள்துறை செயலாளர் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த முழு விபரங்கள் இதோ:
 
> லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்படுகிறார்.
 
> குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி பிரிவு டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி வன்னியபெருமாள் நியமிக்கப்படுகிறார்.
 
> சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ்குமார் நியமிக்கப்படுகிறார்.
 
> பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி பால நாக தேவி நியமிக்கப்படுகிறார்.
 
> மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபியாக அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்படுகிறார்.
 
> காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி வினித் தேவ் வான்கடே நியமிக்கப்படுகிறார்.
 
> திருச்சி காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி காமினி நியமிக்கப்படுகிறார்.
 
> திருச்சி காவல் ஆணையராக இருந்த சத்யப்பிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்படுகிறார்.
 
> வடக்கு மண்டல இணை ஆணையராக இருந்த ரம்யா பாரதி மதுரை டிஐஜியாக நியமிக்கப்படுகிறார்
 
> புதிய வடக்கு மண்டல இணை ஆணையராக தலைமையிட இணை ஆணையர் சாமுண்டேஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார்
 
> தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
 
> பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் சென்னை தலைமையிட ஐஜியாக நியமிக்கப்படுகிறார்.
 
> சென்னை தலைமையிட கூடுதல் ஆணையர் லோகநாதன் மதுரை காவல் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
 
> கோவை ஐஜி சுதாகர் சென்னை போக்குவரத்து காவல் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
 
> மதுரை காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், தென் மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
> காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி சந்தோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
> மேற்கு மண்டல ஐஜியாக புவனீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
மேற்கண்ட அதிகாரிகள் உட்பட 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்