எலும்பு முறிவு ஏற்பட்டபோதிலும் பொதுத்தேர்வு எழுத வந்த சிங்கப்பெண்: சக மாணவிகள் ஆச்சரியம்..!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (10:58 IST)
மதுரையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் எலும்பு முறிவு ஏற்பட்டு கை கால்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் பொது தேர்வு எழுத வந்ததை அடுத்து சக மாணவிகள் ஆச்சரியமடைந்தனர். 
 
மதுரை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் சமீபத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து கை கால் மற்றும் முதுகு தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் கை கால்களில் மாவு கட்டு போட்டிருந்த நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு எழுத நேற்று தேர்வு அறைக்கு வந்தார். 
 
அவருக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் கைகால் எலும்பு முறிவுடன் தேர்வு எழுதினார். அவர் தேர்வு எழுத வந்ததை பார்த்து அவருடன் படிக்கும் சக மாணவிகள் ஆச்சரியமடைந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்