81-வது பட்டப்படிப்பு நிறைவு விழாவில் மருத்துவ மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார் - அமைச்சர் ம. சுப்பிரமணியன்!

J.Durai
வியாழன், 13 ஜூன் 2024 (12:03 IST)
மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 81-வது பட்டப்படிப்பு நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.
 
இதனை  தொடர்ந்து மருத்துவ மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
 
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் எம். ஜி.ஆர்.மருத்துவக் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நாராயணசாமி, மருத்துவகல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி ,சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர் டி சேகர், ஐட்ரீம் மூர்த்தி, அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி, மருத்துவக் கல்லூரி துணை முதல்வர், மருத்துவமனை கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அலுவலர், மருத்துவ பேராசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள், மாணவர் மாணவியர்கள் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்