18 வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பெங்களூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஊழல்வாதிகளை சிறையில் அடைப்பதற்காக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தோம். ஊழல்வாதிகளை சிறையில் அடைக்கக் கூடாதா? ஒரு பக்கம் பிரதமர் மோடி இன்னொரு பக்கம் 12 லட்சம் கோடி ஊழல் செய்த காங்கிரஸ் என்று காங்கிரஸ் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் கடுமையாக குற்றம்சாட்டினார்.
இதற்கு, தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். , ஊழல் குறித்து மோடியும், அமித்ஷாவும் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது!
ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டுமெனில் முதலில் செல்ல வேண்டியவர்கள் பாஜகவினர் தான்.
இவர்கள் அனைவரும் சுதந்திர போராட்ட தியாகிகள் அல்ல! ஊழல் செய்து மூலம் சலவை செய்யப்பட்டவர்கள். தற்போது பாஜகவில் முக்கிய அமைச்சர்களாகவும், தலைவர்களாகவும் பதவியில் இருக்கின்றனர். இப்படியிருக்க ஊழலுக்கு எதிராக மோடியும், அமித்ஷாவும் எப்படியெல்லாம் கதை விடுகிறார்கள் பாருங்கள்!
தேர்தல் பத்திர ஊழலுக்கென சட்டம் இயற்றி 8250 கோடியை கொள்ளையடித்து பாஜக தான் என்பது உலகறிந்த உண்மை! என்று தெரிவித்துள்ளார்.