வடிவேலுவின் ‘மீன்’ காமெடியுடன் அதிமுகவை ஒப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (19:20 IST)
வடிவேல் நடித்த திரைப்படம் ஒன்றில் இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் என்ற காமெடியுடன் அதிமுகவை ஒப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் என்ற காமெடியில்  ஒவ்வொரு வார்த்தையாக நீக்கப்பட்டு கடைசியில் விற்கப்படும் என்ற வார்த்தை மட்டும் இருக்கும் காமெடியை அதிமுகவுடன் முதல்வர் ஸ்டாலின் ஒப்பிட்டுள்ளார்
 
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அண்ணாவை இழந்து, திராவிடத்தை இழந்து, முன்னேற்றத்தையும் இழந்து கடைசியாக கழகத்தை பாஜகவிடம் அடகு வைத்து தொண்டர்களின் கோபத்துக்கு ஆளாகி உள்ளனர் என அதிமுக குறித்து முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது பேசியுள்ளார். அவரது இந்த பேச்சை அனைவரும் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்