இலங்கையில் நிலநடுக்கம்.. திருச்செந்தூரில் பக்தர்கள் குளிக்க தடை..!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (16:11 IST)
இலங்கையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து  திருச்செந்தூரில் பக்தர்கள் குளிக்க தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்திய பெருங்கடலில் இலங்கை அருகே 6.2 ரிக்டர் என்ற அலகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்  இலங்கை தலைநகர் கொழும்பு அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. 
 
இருப்பினும் சுனாமி எச்சரிக்கை குறித்து அல்லது இந்த நிலநடுக்கம்  குறித்த சேத விவரங்களும் வெளியாகவில்லை. இந்த நிலையில்  இலங்கை அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது 
 
தற்போது கந்த சஷ்டி திருவிழா திருச்செந்தூரில் நடைபெற்று வருவதை அடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து உள்ளனர். இந்த நிலையில் கடலில் குளிக்க தடை என்ற அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பாதுகாப்புக்கு காரணங்களுக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்