திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா! – வெளிநாடுகளில் இருந்து வந்து குவிந்த பக்தர்கள்!

செவ்வாய், 14 நவம்பர் 2023 (10:27 IST)
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியுள்ள நிலையில் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்துள்ளனர்.



முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கிய நிலையில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். நேற்று வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

இரண்டாவது நாளான இன்று காலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், யாக பூஜை ஆகியவதை நடத்தப்பட்டது. பகல் 12.45 மணியளவில் சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருள உள்ளார். மாலை 4 மணிக்கு சுவாமி ஜெய்ந்தி நாதர் வீதி உலா நடைபெறுகிறது.

இரண்டாவது நாளான இன்றே பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு அலையலையாய் வந்த வண்ணம் உள்ளனர். உள்நாட்டில் மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வந்துள்ளனர். சனிக்கிழமை நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் க்லந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்