நீட் தேர்வில் தமிழக மாணவர் சாதனை...

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (20:20 IST)
இந்திய மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தமிழகத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 78 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 59 ஆயிரத்து 785 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழக அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 5-வது இடத்தையும் கரூர் மாணவர் கார்வண்ண பிரபு பெற்றுள்ளார். இந்த மாணவனின் தந்தை கண்ணன் டாக்டராகவும், தாய் கெளசல்யா அரசு மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவராகவும் உள்ளார். 
 
மேலும், மாணவன்., கார்வண்ண பிரபு., நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் பிளஸ்-2 படித்தவர். இவர் 500-க்கு 476 மதிப்பெண் பெற்றிருந்தார். தற்போது நீட் தேர்வில் அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். 
 
இந்த சாதனை குறித்து மாணவர் கார்வண்ண பிரபு கூறிதவாது:  நீட் தேர்வுக்காக பள்ளியின் சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தேன். பள்ளி வகுப்பு முடிந்து தினமும் 4 மணி நேரம் இதற்காக செலவிட்டேன். கடந்த 2 வருடங்களாக நீட் பயிற்சி எடுத்தேன். அகில இந்திய அளவில் 700-க்கு 572 மதிப்பெண் பெற்றுள்ளேன்.
 
இது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை, தாயாரை போல, டாக்டராகி  மக்களுக்குச் சேவை செய்வேன் என்றும், மனநல மருத்துவர் மற்றும் நரம்பியல் மருத்துவராக சேவையாற்றுவேன் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்