நீட் தேர்வில் 196 கூடுதல் மதிப்பெண் வழங்க உச்ச நீதிமன்றம் தடை...

வெள்ளி, 20 ஜூலை 2018 (13:32 IST)
நீட் தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்கிற உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 
நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு கேள்வித்தாளில் மொழிபெயர்ப்பு பிழை இருந்ததால் 196 கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பால் மீண்டும் மதிப்பெண் பட்டியல் தயாரித்து மீண்டும் கவுன்சிலிங் நடத்த வேண்டிய நிலைக்கு சி.பி.எஸ். தள்ளப்பட்டது.
 
எனவே, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்தனர். 196 கூடுதல் மதிப்பெண் வழங்குவதால் மற்ற மாணவர்கள் பாதிப்படைவார்கள் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்