தமிழகம் வந்தது சிறப்பு ரயில்.. காயமடைந்த பயணிகளுக்கு அரசு சார்பில் சிகிச்சை..!

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (08:24 IST)
ஒடிஷா மாநிலத்தில் நேற்று மூன்று ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதி கொண்ட பயங்கர விபத்து நாட்டையே குலுக்கியது என்பதும் இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த ரயிலில் வந்த தமிழர்களை சென்னை அழைத்து வருவதற்காக நேற்று சிறப்பு ரயில் சென்றது என்பதும் அந்த சிறப்பு ரயிலில் சென்னைக்கு வரும் தமிழக பயணிகள் அழைத்துவரப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த சிறப்பு ரயில் இன்று அதிகாலை 4:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த போது காயமடைந்த பயணங்களுக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஒரு சிலருக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே முதலாவது சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் பாதுகாப்புடன் சென்னை வந்ததை அடுத்து அந்த பயணிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்