ஆயுத பூஜை எதிரொலி: சுவிதா சிறப்பு ரயிலில் 3 மடங்கு கட்டண உயர்வு; அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (12:17 IST)
ஆயுதபூஜையையொட்டி இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயிலின் கட்டண உயர்வால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
 
பண்டிகை நாட்களில் சுவிதா சிறப்பு ரயில்கள் சில மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களுக்கு பிளக்ஸி முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
 
இந்நிலையில் வரும் ஆயுத பூஜையை முன்னிட்டு திருநெல்வேலிக்கு இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயிலில் மும்மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அதன்படி திருநெல்வேலிக்கு ஸ்லீப்பர் கோச் டிக்கெட் ரூ.1,275 ஆகவும், 3-ம் வகுப்பு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ.3,655ஆகவும், 2-ம் வகுப்பு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ.5,175 எனவும் வசூலிக்கப்பட்டுள்ளன.
 
சாதாரணமாக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயில்களில் ஸ்லீப்பர் கோச் டிக்கெட் விலை ரூ.385 தான். ஆனால் அது மும்மடங்கு உயர்ந்துள்ளது. இப்படி இருந்தால் எப்படி நடுத்தர மக்கள் ரயில் சேவையை பயன்படுத்துவது என மக்கள் வேதனையுடன் தங்கள் குமுறல்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்