உணவகங்களில் முதியோர்களுக்கும் , ஊனமுற்றோர்களும் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவையினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் அடுத்த பூம்புகார் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன், கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் கையாளும் விதம் வரவேற்கத்தக்கது.
பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்த நிலையில் அடிதட்டு மக்கள் அவசர தேவைக்கு பணம் பெறுவதற்கு உதவும் அடகு கடை , துணிக்கடை பாத்திரக்கடை , செருப்பு கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும். உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதிக்கும் நிலையில் வயதானவர்களும் ஊனமுற்றவர்களும் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்க வேண்டும். ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் சிலர் வணிகர்களை வெளியே வரவழைத்து மிரட்டல் தோனியில் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.