நேற்று ஒரே நாளில் மதுவிற்பனை இத்தனை கோடியா?

செவ்வாய், 15 ஜூன் 2021 (07:17 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டு இந்த நிலையில் நேற்று முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் நேற்று காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறந்தவுடன் மது பிரியர்கள் முண்டியடித்துக்கொண்டு மதுபாட்டில்களை வாங்கினர்.
 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் சுமார் 165 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட 27 மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் ரூபாய் 164.87 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதிகபட்சமாக மதுரை மண்டலத்திலும், அடுத்து சென்னை மண்டலத்திலும் மதுவிற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
நேற்று மிக அதிகமாக மதுவிற்பனை நடந்த மாவட்டங்களின் விபரங்கள் பின்வருமாறு: 
 
மதுரை மண்டலம் 49 கோடியே 54 லட்சம்
சென்னை மண்டலம் 42 கோடியே 96 லட்சம்.
திருச்சி மண்டலம்  33 கோடியே 65 லட்சம்
சேலம் மண்டலம் 38 கோடியே 72 லட்சம் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்